×

பிரசாரத்தில் தோலின் நிறம் பற்றி பேச்சு; மோடியின் அப்பட்டமான இனவெறியை காட்டுகிறது: காங்கிரஸ் கடும் தாக்கு


புதுடெல்லி: இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து காங்கிரஸ் கட்சியின் வௌிநாடுவாழ் இந்தியர்களின் தலைவர் சாம் பிட்ரோடா நேற்று முன்தினம் பேசியிருந்தார். இது குறித்து பிரதமர் மோடி, “குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கருப்பு நிறம் என்பதாலேயே அவரை தோற்கடிக்க காங்கிரஸ் முயன்றது” என்று பிரசாரம் செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தன் டிவிட்டர் பக்கத்தில், “நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா இருவரும் போட்டியிட்டனர். பாஜ, அதன் கூட்டணி கட்சிகள் முர்முவை ஆதரித்தன.

காங்கிரஸ் மற்றும் 17 எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரித்தன. தேர்தலில் ஒரு வேட்பாளரை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் தோலின் நிறத்தின் அடிப்படையில் இல்லை. அது ஒரு அரசியல் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் தோலின் நிறத்தை மோடி கொண்டு வந்தது இனவெறியின் அப்பட்டமான வௌிப்பாடு” என்று கடுமையாக சாடி உள்ளார்.

The post பிரசாரத்தில் தோலின் நிறம் பற்றி பேச்சு; மோடியின் அப்பட்டமான இனவெறியை காட்டுகிறது: காங்கிரஸ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,New Delhi ,Sam Pitroda ,President ,Overseas ,Indians ,Congress Party ,India ,President of the Republic ,Dradupati Murmu ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...